நிகழும் நிதி சவால்களை உணவக உரிமையாளர்கள் கையாள்வது எவ்வாறு ? பட்டய கணக்காளரின் பார்வையில்

இந்நேர்காணலை உங்களுக்கு வழங்குபவர்கள் நெட் பாக்ஸ் (NETFOX ). இது ஈ-கேப்ஸ் (E-Caps ) தயாரிப்பு.மேலும் அறிய இங்கே சொடுக்கவும்

-தாமோதரன் பழனி (தமிழாக்கம் :து.மு.சுதர்சனராஜு)

கொரோனா தீநுண்ணுயிரி காரணமாக இந்தியாவின் பல துறைகளும் ஆட்டம் கண்டு உள்ளது . முக்கியமாக உற்பத்தித் துறையில் தொடங்கி உணவுத்துறை வரை கொரோனாவின் கோரதாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.நோய் தொற்றின் காரணமாக பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.இதனை   நிதி ரீதியாக உணவகங்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்று கோவையை சார்ந்த  பட்டய கணக்காளர் பி மதுஷாலினி கூறுகையில்,உணவு  உரிமையாளர்கள் நிலைமையை நிதி கோணத்தில் சமாளிக்க வேண்டும்.  அதுவே இந்த இக்கட்டான சூழ்நிலைகளில்  இருந்து மீள வழியாகும் என்று  கூறுகிறார்.

தொற்றுநோய் உலகை மிகவும் பாதித்து வாடிக்கையாளரின் போக்கை  மாற்றியுள்ளது . மனித தலையீட்டை நம்பியிருந்த நிறுவனங்கள் தானியங்கி இயந்திரங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன. பறகலம்(Drone) மூலம் உணவு  சேவைகளும் , மருத்துவமனைகளில் உணவு வழங்கல் தானியங்கி இயந்திரம் (ரோபோக்களால் )மூலம் செய்யப்படுகிறது, இதற்கு முன்னர் மனித தலையீடு தேவைப்பட்டது இப்போது அறிவார்ந்த இயந்திரங்களை  சார்ந்து உள்ளனர் .இதுவே தற்போதைய உண்மை . ” தேவையற்ற மற்றும் செயல்முறை சார்ந்த செயல்பாடுகளை நிறுவனங்கள் தானியங்கி இயந்திரம் மூலமும்   ,  பகுப்பாய்வு மற்றும் நிர்வாகப் பாத்திரங்களுக்கு மட்டுமே மனிதவளத்தை நம்பியிருக்கும் காலமானது வந்துவிட்டது” , என்று மதுஷாலினி  கூறுகிறார்.

பி மதுஷாலினி(பட்டய கணக்காளர்)

மனிதவளம் மற்றும் உள்கட்டமைப்புடன் தொடர்புடைய செலவுகள் உணவு நிறுவனங்களுக்கு  பெரும்பாலும் உள்ளதால் நிறுவனங்கள் இந்த வளங்களை சந்தை வணிக உத்திகளுக்கு ஏற்றவாறு  மறுமதிப்பீடு செய்ய வேண்டும்  என  தெரிவித்தார் .எடுத்துக்காட்டாக    இணைய உணவு நிறுவனங்கள் ஸ்விக்கி மற்றும் ஜொமாடோ மளிகை சந்தையில் நுழைந்துள்ளது , உணவு  சேவை வழங்குநர்கள் மற்றும் நட்சத்திர உணவகங்கள் வீட்டு உணவுகளை வீட்டிலிருந்து வழங்கத் தொடங்கிஉள்ளனர் .

சிறிய உணவு நிறுவனங்களின் வருங்கால மேம்பாடு குறித்து தெரிவிக்கையில்  “ சிறியநிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும்  விற்பனையாளர்களின் வணிகத்தில் இறங்குவது  இதற்கு நல்ல வழியாகும் . தொழில் துறையில் ஏற்கனவே நிபுணத்துவம் இருப்பதால், ஒருங்கிணைப்புடன் தொடர்புடைய நேரம் மற்றும் செலவுகள் கணிசமாக இருக்காது. மேலும் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் பணி மூலதனத்தில் தற்காலிக குறிப்பிட்ட கடன்களை வழங்குகின்றன, இது வணிகத்தை மறுதொடக்கம் செய்ய பெரிதும் உதவும்  “ என தெரிவித்தார் .

இந்த கடன்களின்  தடைக்காலம் மற்றும் குறைந்த வட்டி விகிதங்களை  வங்கிகள் நீட்டித்துள்ளன. இதனால் பிணையமில்லாத கடன், நிதிய மூலதனம் ,துணை கடன் வசதி, ஆதார விலையில் வரி விலக்கு  ஆகியவை எளிதில் சாத்தியமாகும் ,இது  சிறிய  நிறுவனங்களின் பணப்புழக்கத்தை  பெரிதும் மேம்படுத்த உதவும் .

சிறு மற்றும் நடுத்தர உணவக உரிமையாளர்கள்  நிதிப் பிரச்சினைகளை எதிர்கொள்ள சரியான நிதி விருப்பங்களைத் தேர்வு செய்ய வேண்டும் ,செலுத்த வேண்டிய தொகை , சரக்கு மற்றும்  செலவு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் .வாடிக்கையாளர்களின் கடன் தகுதியை மறு மதிப்பீடு செய்தல், தளவாடங்களுடன் தொடர்புடைய அதிகரிக்கும் செலவுகளை நிர்வகித்தல், தேவையான அளவு பணப்புழக்கத்தை பராமரித்தல் ஆகியவை வங்கிகளுக்கு  மிகவும் முக்கியமானதாகும்.

டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்வது எவ்வாறு நெறிமுறையாக சரியானது அல்ல என்பதையும் அவர் மேற்கோள் காட்டினார்.மேலும்  “உணவக  உரிமையாளர்கள் பிற செலவுக் குறைப்பு உத்திகளில் கவனம் செலுத்தலாம், அதாவது ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்தல், ஓய்வூதியத் திட்டங்களுக்கு முதலாளியின் பங்களிப்பை மேம்படுத்துதல் , சுகாதார செலவினங்களைக் குறைக்க ஆரோக்கியமான செயல்முறைக்கு மாறுதல் , முன்கூட்டியே ஓய்வு  மற்றும் தன்னார்வ பணிநீக்கம், கூடுதல் நாட்கள் செலுத்தப்படாத விடுப்பை வழங்குவது போன்றவற்றை மேற்கொள்ளலாம்  என தெரிவித்தார் .

தனித்து நிற்கும் உணவகங்கள் வரும் காலங்களில்  முன்னேற நிதி சார்ந்து  சிந்தித்து செயல்பட வேண்டும் .அதனை போலவே புதிய உணவகத்தை  தொடங்கும்போது நிறுவனத்தின் தயாரிப்பு வாடிக்கையாளரை திருப்திப்படுத்துவதை உறுதி படுத்த வேண்டும் .

“எதிர்காலம் நிச்சயமற்றது. நோயின் தீவிரம்  எவ்வளவு காலம் இருக்கும், எதிர்காலத்தில் அதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்பது இன்னும் முழுமையாக மதிப்பீடு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். சிறந்தது முதல் மோசமான சூழ்நிலைகள் வரையிலான காட்சிகளின் அடிப்படையில் திட்டங்களை உருவாக்குவது நல்லது . ”என  மதுஷாலினி கூறினார் .மேலும் சந்தை தேவைகளுடன் தயாரிப்பினை  சீரமைத்தல் ,நிதி உத்திகளை  ஆராய்ந்து செயல்படுத்தல் ஒவ்வொரு செயல்பாட்டின் தேவைகளையும் செலவுகளையும் பகுப்பாய்வு செய்து அதற்கேற்ப நிதி ஒதுக்க வேண்டும் அதிகப்படியான செலவினங்களைக் குறைக்க செலவு கட்டமைப்புகளை நெருக்கமாக மதிப்பீடு செய்தல்.  இதுவே மிகவும் முக்கியமானது என தெரிவித்தார்.

இந்நேர்காணலை உங்களுக்கு வழங்குபவர்கள் நெட் பாக்ஸ் (NETFOX ). இது ஈ-கேப்ஸ் (E-Caps ) நிறுவனத்தின் தயாரிப்பு.