உலக சமையல் கலைஞர்கள் தலைவர் தாமஸ் குக்ளர் உடன் பிரத்யேக நேர்காணல்

ADVERTISEMENT: This article is powered by NAGA Foods.- www.nagamills.com

-பா ஸ்வாமிநாதன் (தமிழாக்கம் து மு சுதர்சன ராஜு )

தாமஸ் குக்ளர், உலக செஃப் சங்கங்களின் (World Chefs) தலைவர்  செப் பாரத்துடன் பேசிய நேர்காணலின்போது உணவுத்துறையில் மேம்படுத்த வேண்டிய அம்சங்கள், கொரோனா காலகட்டத்திலிருந்து பொதுமக்களும் சமையல்  கலைஞர்களும் மீண்டுவருவதற்கான வழிமுறைகள் மற்றும் பல்வேறு செயல்பாட்டு முறைகள் குறித்து விவரித்தார்.

உலகம் முழுவதும் கொரோனா என்னும் கொடிய நோய் பரவி வருகிறது. இக்காலகட்டத்தில் மக்களின் எதிர்காலநலன் மற்றும் வாழ்வாதாரம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இந்த உலகே நோயின் பிடியில் சிக்கியுள்ளது. அனைவரும் நோயிலிருந்து தற்காத்துக் கொள்வது நம்முடைய முக்கிய கடமையாகும். இந்த நோயினை ஒரு சர்வதேச பரவல் என்றுதான் கூறவேண்டும்.ஒருவருக்கொருவர், அன்பு சார்ந்த அக்கறைதனை கொள்ள வேண்டும் .
நாம் அனைவரும் இந்த காலகட்டத்தில் பயம் மற்றும் பதற்றமான தன்மையுடன் வாழ்ந்து வருகிறோம்.எதிர்காலம் நம்மிடையே பயம் சார்ந்த உணர்வுவினை ஏற்படுத்தி உள்ளது .இதில் அனைத்திலும் இருந்து மீண்டு வர எப்போதும் நேர்மறையாக சிந்திக்க வேண்டும். நாம் அனைவரும் மீள்வோம் என சிந்தியுங்கள், நான் மீள்வேன் என்று அல்ல, எதிர்காலத்தில் நல்ல வழிகள் கண்டிப்பாக இருக்கும்,  அனைவருக்கும் வருங்காலத்தில் நல்ல வாழ்வாதாரம் நிச்சயம் அமையும்.

தாமஸ் குக்ளர்கொரோனா வருவதற்கு முன்பு, வந்த பின்பு என தற்போது உள்ள காலகட்டத்தை பிரிக்கலாம். உங்கள் கருத்துப்படி, விருந்தோம்பல் துறைக்கு எவ்வாறு மீண்டும் புத்துயிர் தருவது ?

என்னைப் பொறுத்தவரை உறுதியான நேர்மறை சிந்தனைகள் வேண்டும். சில சுகாதார மாற்றங்கள் வடிவமைக்கப்பட வேண்டும் . புதிய சுகாதார முறைகள் , புதிய பணி நுட்பங்கள், சமூக இடைவெளி இவையே நம்மை காக்கும். வெவ்வேறு உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்த பட வேண்டும். உணவு உருவாக்குவதில் மேலும் கவனம் செலுத்த வேண்டும் .

1.பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட வேண்டும்.  
2.Automation தானியங்கி முறை அதிகப்படுத்த வேண்டும்.

மக்கள் மீண்டும் சுயமாக சமைக்கத் தொடங்கியது மிகவும் நல்ல செயல்.ஊரடங்கு வீட்டில் சிறப்பாக குடும்பத்தினர் இடையே அன்பினை உருவாக்கியது. வீடு என்பது எப்போதும் பாதுகாப்பானது, நேர்மறை அதிர்வைக் கொண்ட சூழல்தனை கொண்டதாகும்.இந்த நேர்மறையான எண்ணங்களை வருங்காலத்தில் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

தற்பொழுது பயின்றுவரும் சமையல் கலைஞர்கள் இனிவரும் காலத்தில் தங்களை பாதுகாப்பு அம்சம் நிறைந்த முறைகளில் மேம்படுத்திக்கொள்ள என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்?

இது குறித்து வல்லுநர்கள், மாணவர்கள் மற்றும் மற்றும் அனைவருக்கும் விழிப்புணர்வுடன் கற்றல் இருக்க வேண்டும்.வல்லுனர்களிடையே இது குறித்து ஆலோசிக்க வேண்டும் இனி வரும் மாணவர்கள் தங்கள் சமையலறை பழக்கம்தனில் பாதுகாப்பு அம்சங்களை முன்னிறுத்தியே ஆக வேண்டும் அவ்வாறு இருப்பதே பொதுமக்களுக்கு ஒரு பாதுகாப்பு நிறைந்த உணவினை வழங்க வழிகோலும். வருங்கால சமுதாயமானது இனி உணவு பாதுகாப்பு பணியில் மிகுந்த அக்கறை கொள்ளும் இது அவர்களின் வாழ்வாதாரத்தில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிடும் காரணியாக அமையும்.

வேலை இழப்பு, பணமில்லா சூழ்நிலை பல சமையல் கலைஞர்களை மன வேதனைக்கு ஆளாகி இருக்கிறது.எவ்வாறான முயற்சிகள் அவர்கள் இதிலிருந்து மீண்டு வர மேற்கொள்ள வேண்டும்?

சமையல் கலைஞர்களுக்கு மட்டுமல்ல அனைவரும் நேர்மறையாக சிந்தித்து வாழவேண்டும் நம்மால் இனிவரும் காலங்களில் வாழ்ந்து விட முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுவது இதிலிருந்து மீண்டு வருவதற்கான ஒரு நல்ல வழியாகும். நான் தனிப்பட்ட முறையில் பரிந்துரைப்பது ஆன்லைன் மூலம் உங்களை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும். கருத்தரங்குகள், ஆன்லைன் கற்றல், சுய பயிற்சி மற்றும் வீட்டுப் பயிற்சி ஆகியவை கலைஞர்களின் திறன்களை இழக்காதபடி மற்றும் இரண்டாவதாக. அதிக திறன்களை வளர்ப்பதற்கான ஒரு செயலாக அமையும்.இது ஒரு வேதனையான காலகட்டம்ஆனால் நாம் அனைவரும் அறிந்தபடி, உணவு மற்றும் ஆரோக்கியம் முக்கியமானது இதனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். உணவு என்பது வாழ்க்கையில் மிக முக்கியமானது. எனவே நேர்மறையாக சிந்திப்பதே இதிலிருந்து நாம் மீண்டும் வருவதற்கான வழி.சமையல் கலைஞர்கள் மற்றும் அனைத்து பொதுமக்களும் இதிலிருந்து நம்மால் மீண்டு வர இயலும் என்ற நம்பிக்கையினை கொள்ள வேண்டும் இதுவே வருங்காலத்தை நமக்கு ஒளிமயமானதாக மாற்றும்  நோய்க்கு எதிராக எதிர்த்து போராடினால் வருங்காலத்தில் நாம் கட்டாயம் வெல்லலாம்.

கொரோனா வின் தாக்கம் விருந்தோம்பலுக்குள் நுழையும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

விருந்தோம்பல் துறையில் உலகளாவிய சந்தை இன்னும் விரிவடைந்து வருவதால், நான் தனிப்பட்ட முறையில் அப்படி நினைக்கவில்லை. திறமையான இளம் சமையல் கலைஞர்கள்மிகவும் தேவை, தேடப்படுகிறார்கள் . சமையல் கலைஞர்களுக்குசிறந்த எதிர்காலம் இருக்கும்.இப்போது வேண்டுமானால் இது கடினமான காலகட்டம் ஆக இருக்கலாம் ஆனால் இந்நோயின் தாக்கம் முடிந்த பிறகு நிச்சயமாக நல்ல எதிர்காலம் அமைய நிச்சயம் நல்ல வாய்ப்பிருக்கிறது.

நீங்கள் பல்வேறு நாடுகளில் உள்ள சமையல் கலைஞர்கள் உடன் உரையாடியிருப்பீர்கள். எந்த நாட்டில் விருந்தோம்பல் துறை சிறப்பாக இருக்கிறது மற்றும் எந்த பகுதி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது? (எ.கா: ஆசியா,கிழக்கு ஆப்பிரிக்கா போன்றவை)

தனிப்பட்ட முறையில், நான் தொழில்துறையின் அனைத்து பகுதிகளிலிருந்தும் தினசரி பேச்சுவார்த்தை நடத்தினேன். உலகம், மற்றும் எல்லா இடங்களிலும் மக்கள் / சமையல் கலைஞர்கள் சிறப்புடன் செயல்பட்டு வருகின்றனர். எந்த வித்தியாசமும் இல்லை

உலகெங்கிலும் உள்ள எந்த இடமும் எங்கள் சொத்துக்களாக இருக்கும் .இந்த நோயினை விழிப்புணர்வுடன் கையாண்டால் மீண்டு வர இயலும் என்ற நம்பிக்கையினை கொள்ள வேண்டும் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பாதிப்பினை அடைந்துள்ளன இருந்தபோதும் நம்மால் இந்த நோயின் தாக்கத்திலிருந்து மீண்டும் புத்துயிருடன் எழ முடியும் என்ற நம்பிக்கை கொள்ள வேண்டும்.

எவ்வாறு இந்த தொற்றுநோயைக் கையாள இந்திய சமையலறைகள் வரும்காலத்தில் செயல்பட வேண்டும்?  வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கு  இந்திய சமையலறைகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன?

பாதுகாப்பில் விழிப்புணர்வு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.பாதுகாப்பான வழிமுறைகளில் உணவு தயாரிப்பது அதனை கையாள்வது அதனை பரிமாறுவது என எண்ணற்ற முறைகள் உள்ளன. நிச்சயமாக அதிகமான பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு நாடு முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டும்.நம்மிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் உணவினை தயாரித்து வழங்க வேண்டும் நேர்மறையான சிந்தனைகள் கொண்டு கொடிய நோயிலிருந்து வென்று வர வேண்டும்.

ஒட்டுமொத்தமாக சமையல் கலைஞர்கள் சமூகத்திற்கு முதல் -3 பரிந்துரைகளை வழங்கும்படி உங்களிடம் கேட்கப்பட்டால், அவை என்னவாக இருக்கும்?

1) எப்போதும் நேர்மறையாக சிந்தியுங்கள், புத்திசாலித்தனமாக இருங்கள், உங்கள் சுயத்தை இழந்துவிடாதீர்கள்.

2) உங்களைப் பயிற்றுவிக்கவும், கற்றலைத் தொடரவும், உங்கள் முன்னால் புதிய அடிதளத்தினை அமைக்கவும் வழி வகுங்கள்.

3) தாழ்மையுடன் இருங்கள், நீங்கள் செய்ய வேண்டியதையெல்லாம் அனைத்து மக்களுக்கும் ,நம்பிக்கை ஏற்படும் வகையில் செய்யுங்கள். மற்றும் தேவைப்படுபவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்,மனிதகுலத்திற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக எப்போதும் விளங்க வேண்டும்.
அனைவருக்கும் சிறப்பான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள், பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள், நேர்மறையாக சிந்தியுங்கள்.

இவ்வாறு உலக சமையல் கலைஞர்களின் சங்கத்தலைவர் அருமையாக இக்காலகட்டத்தில் இருந்து நம்மால் நிச்சயம் மீண்டு வர இயலும் என நம்பிக்கை பட தனது நேர்காணலின் போது தெரிவித்தார் .நம்பிக்கை கொள்வோம் நிச்சயம் கொடிய நோயிலிருந்து மீண்டு வருவோம்.

 

 

Related Posts