உணவகங்களுக்கான விற்பனை முறையை பலப்படுத்த இதயம் நிறுவனம் முடிவு

ஐஸ்வரியலட்சுமி (தமிழாக்கம்  து.மு.சுதர்சனராஜு )

தரமான தயாரிப்புகளுக்கு பெயர் பெற்றது இதயம் நிறுவனம் .எண்ணெய் உற்பத்தி செய்யும் தொழிலில் 90 ஆண்டுகள் சிறப்புடன் இயங்கி வருவது  ‘இதயம்’ எண்ணெய் நிறுவனம் .   நுகர்வோர் விற்பனை(B2C), மற்றும் வணிக  விற்பனை (B2B) சந்தை மூலம்  நிறுவன விற்பனை பிரிவை வலுப்படுத்தி வருகிறது   . ஷெப் பாரத் இணைய தளத்திற்கு அந்நிறுவனம் சார்பில் அளித்த பிரத்யேக நேர்காணல்.

வி .ஆர் .முத்து

‘இதயம்’ தர அடையா சொந்தமான வி.வி.வி & சன்ஸ் எடிபில் ஆயில்ஸ் (சமையல் எண்ணெய்)  நிறுவனத்தின் தலைவர் வி .ஆர் .முத்து கூறும்போது ,” உணவகங்களுக்கு விநியோகிக்கும் முறையை செம்மை படுத்த திட்டமிட்டுள்ளோம். விற்பனை வழியை  மேலும் மேம்படுத்த முயற்சித்து எங்கள் நிறுவனத்திற்கு பிரகாசமான      எதிர்காலத்தை உருவாக்க உழைக்கின்றோம் . நாங்கள்பாரம்பரிய விற்பனையை மேம்படுத்த    குறைந்த விலை,  தரமான தயாரிப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றோம்”,  என்றார் .

மேலும் அவர் இதற்காக அவர்கள் மேற்கொண்ட முன்னேற்ற முறைகள் குறித்து கூறும் போது , ” புதிய  விற்பனை மாதிரியில் நுழைவதற்கு ஆரம்பத்தில் சந்தேகம் கொண்டிருந்தோம். உண்மையில், எங்களிடம் எந்த வியாபாரமும் இல்லை என்று  நினைத்து  தவறு செய்தோம், பிறகு உறுதியுடன் ஆக்கபூர்வமாக செயல்பட்டு சாதனை புரிந்தோம் .இதயம் எண்ணெய் சக்திவாய்ந்த நிறுவனம் . தரமான தயாரிப்பாக இருப்பதால் அன்பான வரவேற்பு உள்ளது. விருதுநகரில் உள்ள பிரின்ஸ் உணவகத்துடன்  சமீபத்தில் கையெழுத்திட்ட ஒப்பந்தம், எங்களுக்கு 1000 லிட்டர் வணிகத்தை வழங்கி  உதவியுள்ளது” என மகிழ்ச்சியுடன் கூறுனார்   .

வணிகத்தைப் பெருக்கும் முயற்சி பற்றி தெரிவிக்கையில் ,”சமையல்கலைஞர் தாமோதரன் இதயம்  எண்ணெயைப் பயன்படுத்தி பல சமையல் குறிப்புகளை வழங்கியுள்ளார் .சமையல்கலைஞர் வெங்கடேஷ் பட்டின் ‘இதயம் தொட்ட சமையல் ‘  வலையொளி  நிகழ்ச்சிக்கு  ஆதரவு செய்து வணிகத்தை முன்னேற்றியுள்ளளோம் .வலைப்பதிவில் இதயம் நிறுவனத்தை பயன்படுத்தி சமையல் குறிப்புகளை சமையல்கலைஞர் பிரியா சிவா வழங்கி வருகிறார் . சங்கரா தொலைக்காட்சியில்  எண்ணெய் குளியல் பற்றி  எடுத்து கூறுகிறோம் , வாடிக்கையாளர்கள் எண்ணெய் குளியல் குறித்து தங்கள் கருத்தை தெரிவிக்க தனிதளத்தை உருவாக்கியுள்ளோம் ,இதனால் நம்  கலாச்சாரத்தை திரும்பப் பெற இயலும் ” என முத்து கூறினார் .

“90 ஆண்டுகள் பழமையான இதயம்  நிறுவனத்தில் நன்கு கட்டமைக்கப்பட்ட விநியோகச் சங்கிலி (Supply-Chain) எங்களை உற்சாகப்படுத்துகிறது . பாரததின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆண்டு முழுவதும் மூலப்பொருட்களை வாங்கி  சந்தை விற்பனையை பெருக்குகின்றோம் .  பாரத நாடு ஒருங்கிணைந்த  மக்களை கொண்டு இருப்பதால் ஆண்டு முழுவதும் எங்களால் சிறப்பாக விற்பனையை  முடிகிறது .நாங்கள் மகிழ்ச்சியுடன் மேலும் முன்னேறி வருகின்றோம்”  என நம்பிக்கையுடன் முத்து கூறுகிறார் .

இதயம் தனது வாடிக்கையாளர் தளத்தை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் விரிவுபடுத்தி வருகிறது . அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் இந்த மாநிலங்களில் 1000 டன் எள் எண்ணெய் மற்றும் 2000 நிலக்கடலை எண்ணெய் விற்பனை செய்ய நிறுவனம் முயற்சித்து வருகிறது . தரமான தயாரிப்புகள் குறைவாக இருப்பதால் இது அவர்களுக்கு சாத்தியமான சந்தையாக இருக்கும் என்று முத்து உறுதியளிக்கிறார் .


விளம்பரம்

இப்பகுதியை உங்களுக்கு வழங்கியவர்கள் CETAS Infotech . மாதம் ₹ 2999ல் உங்கள் சொந்த மின்  (Online ) உணவகத்தை  உருவாக்குங்கள். மேலும் விபரங்களுக்கு, Free Trial பெற அழையுங்கள் 95000 91594. 

 

Related Posts