முழு முக கவசம் அணிந்தால் கொரோனாவை நாம் வெல்லலாம்

– சுதர்சன ராஜு

கொரோனா என்னும் கோரஅரக்கன் உலகையே அச்சுறுத்தி வருகிறது.  இதனை முறியடிக்கவும் மக்கள் நலமுடன் வாழவும் பிரிகேட் நிறுவனம் பல்வேறு உபகரணங்களை செய்து வருகிறது இது குறித்து அதன் நிறுவனர் தமிழினியன், ‘செப் பாரத்’ உடன் தொலைபேசி உரையாடலின் போது பின்வரும் கருத்துக்களை தெரிவித்தார் .

கொரோனா காலகட்டத்தில் மக்கள் சானிடைசர் கொண்டு கைகழுவ வேண்டும் மற்றும்  சுகாதாரமான முறையை வாழ்வில் பின்பற்ற வேண்டும் இதற்கு பல்வேறு கருவிகளை வடிவமைத்து உள்ளோம் எனவும் தெரிவித்தார் முழு முக கவசம், கை கழுவும் இயந்திரம் மற்றும் பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களை உருவாக்கியுள்ளோம் எனக் கூறினார் .முழு முக கவசம் எங்களின் ஒரு சிறப்பம்சம் எனவும் தெரிவித்தார் இதனை மக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்கள் மற்றும் உணவகங்களில் பயன்படுத்தலாம் என தெரிவித்தார் .

மேலும் உணவுத் துறையில் எவ்வாறு உணவு உபகரணங்களை பாதுகாப்பான முறையில் பயன்படுத்தலாம் மக்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பது குறித்த கேள்விக்கு பின்வருமாறு தெரிவித்தார்.

 1.உணவகங்களில் கை தொடாமல் கழுவும் இயந்திரத்தை நிறுவ வேண்டும் அதனை நாங்கள் வடிவமைத்து உள்ளோம்.மக்களுக்கு கைகளின் மூலம் தொற்று பரவுவதைத் தடுக்கிறது.

2.மக்களுக்கு பாதுகாப்பினை வழங்கும் வகையில் உணவக பணியாளர்கள் முழுமுகக்கவசம் அணிய வேண்டும் மற்றும் மக்கள் முக கவசம் அணிந்து தான் உணவகங்களுக்கு வரவேண்டும் .

3.உணவகங்களில் வாயிலில் வெப்பமானி கொண்டு அளவிடும் கருவி அதனை திரையிடப்படும் கருவியும் நிறுவப்பட வேண்டும் .இது அவர்களுக்கு பாதுகாப்பினை உறுதி செய்யும் முயற்சியாகும்.

4.உணவு சமைக்கும் பாத்திரங்கள் மற்றும் உபகரணங்களை புற ஊதாக்கதிர்கள் (Ultra-Violet rays) கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

எங்களின் நிறுவனம் இது குறித்து பல்வேறு முறைகளை ஆராய்ந்து வருகிறது.மக்களுக்கு உபயோகப்படும் வகையில் பல்வேறு உபகரணங்களை நாங்கள் செய்து வருகின்றோம் விரைவில் அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவோம்  எனவும் தெரிவித்தார் .